நூல் முழுக்க முழுக்க சிறையில் இருந்த போது சி.ஏ பாலன் சந்தித்த அனுபவங்களை தான் கூறுகிறது. மேலும் பல தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை கண்ணாடி போல காட்டி விடும் இந்த புத்தகம் !
சி.ஏ பாலன் சிறையிலிருந்து வெளியான பின் எழுதிய நூல் இது. முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களால் நிறைந்தது
இந்த நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. புத்தக சந்தையிலும் கூட இந்த புத்தகம் கண்ணில் பட்டது இல்லை. எந்த பதிப்பகத்தில் இந்த நூல் கிடைக்கிறது என்ற தகவல் யாரேனும் தந்தால் நன்றியுடையவனாவேன் !
நூல் துவங்கும் போது சி.ஏ பாலன் சிறையில் சென்று சேர்கிறார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அதன்பின் சிறையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அவர் சொல்லி போகும் போது நமக்கு " இப்படி ஒரு உலகமா?" என்று அச்சமும் வியப்பும் மேலிடும்.