திருக்குறள் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல். உலக மொழிகளில் அதற்கு ஒப்பான வேறு நூல்கள் ஏதுமில்லை என்பது சான்றோர் கூற்று.
அணுவைத் துளைத் தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
- ஒளவையார்
வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொரு நீதி?
– மனோன்மணீயம்
திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்ட 'குறள்' என்னும் யாப்பில் அமைந்தது. 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுகிறது. 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள உரை திரு. மு.வரதராசனார் அவர்களால் எழுதப்பட்டதாகும். திருக்குறள் என்னும் அரிய கருத்துப் புதையலின்று என்நாட்டவரும், எச்சமயத்தினரும், எம்மொழியினரும், ஏற்றிப் போற்றிப் பாராட்டும் உலக பொதுமறையாக திகழ்கிறது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரிய திருக்குறளை, தமிழில் எண்ணற்ற உரைகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன என்றாலும், எங்கள் மன நிறைவுக்காக எளிய உரை ஒன்றை (Kindle eBook) கின்டெல் மின்புத்தக வாசகர்களுக்காக ராஜகாவேரி பதிப்பகம் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
- இர. மணிமேகலை