"We
have to race to save this planet earth since we have only borrowed it
from our children" 2016 முறை கூறினார் மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா
காந்தி அவர்கள். அதுபோல, இந்தப்பூமி இறைவன் நமக்கு வசதியாய் வாழ வாடகையாய்
கொடுத்த வீடு அதை சரியாகப் பராமரிக்கவில்லையென்றால் வீட்டைக் காலி செய்ய
வைப்பார் இறைவன் என்று நகையுணர்வுடன் கூறுகிறார். இப்புவியில்லையேல் இந்த
சூரியக்குடும்பத்தில் மனிதன் இயற்கையாய் வாழக் கோள் எதுவும் உகந்ததாய்த்
தென்படவில்லை . ஆகவே, பூமியைப் பராமரிப்பது நம் தலையாயக் கடமை என்பதில்
மாற்றுக் கருத்து இல்லை.இப்புத்தகத்தைப் படிக்கும் நேரத்தை விட, இடை யிடையே
கண்கள் மூடிக் கற்பனை உலகில் உங்களை மிதக்கச் செய்வது ஆசிரியரின் மகத்தான
வெற்றி.