மனிதனின் அடிப்படை தேவை கல்வி தான். அக்கல்வியை பெறுவதற்கு பல்வேறு
சிரமங்களை இக்கால குழந்தைகள் மேற்கொள்கின்றனர் என்பதே முற்றிலும் உண்மை .
உதாரணமாக, மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காகவும் கல்வியில் முதன்மை
இடத்தைப் பெறுவதற்காகவும் சிரமேற்கொள்வதை கண்கூடாக காண்கிறோம்
இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை முத்திரை பயிற்சிகள் வாயிலாக
இந்நூலில் எளிய நடையில் தொகுத்தளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் டாக்டர்
ஜாண் பி. நாயகம். இந்நூலில் இடம் பெற்றுள்ள எளிய பயிற்சிகளை உங்கள்
குழந்தைகளுக்குத் தவறாமல் கற்றுக்கொடுங்கள். நாள்தோறும் இப்பயிற்சியினை
முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தால் இரண்டு அல்லது மூன்று மாத காலத்தில்
அவர்களது படிப்பில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காண முடியும். தேர்வுகளில்
வெற்றியும் உறுதி!