'தமிழ் படைப்புலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமற்ற பிரபல பெயர்
ரா.கி.ர, சிறந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்புக்கலையில் வல்லமை உடையவர்.
மூலக்கதைகளின் சாரம் குறையாமல் அவற்றை அதே விறுவிறுப்புடன் தமிழுக்குத்
தருவதில் ரா.கி.ர, கைதேர்ந்தவர் என்பதற்கு படபடப்புடன் சிறகடித்த
'பட்டாம்பூச்சி'யே சாட்சி. எப்படிக் கதை எழுதுவது என்ற இவரது புத்தகம்
அறிமுக எழுத்தாளர் களுக்கு சிறந்த வழிகாட்டி, வரலாற்றுப் புதினத்தில்
புதுமையான பாணியைக் கையாண்டு இவர் படைத்த 'நான், கிருஷ்ணதேவராயன்' கம்பீர
அழகு. பாரம்பரியமிக்க பத்திரிகைகளில் எழுதி புகழ்பெற்ற ரா.கி.ர., புலனாய்வு
இதழியலில் தொடர் சாதனைகள் புரிந்து வரும் நக்கீரனில் முதன்முதலாக எழுதிய
'நீங்களும் முதல்வ 'ராகலாம்' என்ற தொடரே இப்போது நூல் , வடிவம்
பெற்றிருக்கிறது. சிகரத்தை தொட 'வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனித னின்
அடிமனதிலும் இருக்கும் ஆசை. அந்த ஆசை வெறும் கனவாகக் கரைந்துவிடாமல் )
'நிஜமாக்குவது எப்படி என்பதை விளக்குவதே 'நீங்களும் முதல்வராகலாம்!'
ஒற்றையடிப் 'பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும், தந்தையைப் போல்
வாசகர்களை முன்னேற் றப் பாதை நோக்கி ரா.கி.ர. அழைத்துச் செல்கிறார், எந்தத்
துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்தத் துறையில் முதன்மையாக வருவதற்கு என சில
பொதுவான புத்திசாலித்தனம் தேவைப்படும் அவற்றை நமது விரல் நுனியில்
திணித்து விடுகிறார்,