வேட்கையின் நிறம் கண்களுக்குப் புலனாகாதது. அந்தரங்கத்தின் உள்ளறைகளின் பெருமூச்சுகளிலும் விம்முதல்களிலும் கரைந்துய கரைந்து தன்னைத் தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வது. உமா ஷக்தி இந்தக் கவிதைகளில் உறவுகளின், வேட்கைகளின் ததும்புதல்களுக்கும் கசப்புகளுக்கும் இடையே ரகசியமான இழைகளைப்பின்னுகிறார். சில சமயம் பட்டு நூலாகி, இன்னொரு சமயம் சிலந்தி வலையாகும் இழைகள் அவை