வரையறுக்கபட்ட தனது வெளிகளுக்குள் தனது அந்தரங்கமான பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளும் அனிதாவின் இக்கவிதைகள் வாழ்வின் சிடுக்கான கணங்களை நிம்மதியின்மையுடன் எதிர்கொள்கின்றன. அன்றாட வாழ்வின், உறவுகளின் புதிர் மிகுந்த தருணங்களை கடந்துசெல்லும்போது ஏற்படும் பரவசங்களும் பதட்டங்களும் இயல்பாக பதிவாகும் இக்கவிதைகள் தனிமையின் இறுக்கம் நிரம்பியவை. இது அனிதாவின் முதல் தொகுப்பு