சிங்கப்பூரின் மூத்த பெண் எழுத்தாளரான நூர்ஜஹான் சுலைமானின் ‘வேர்கள்’ என்ற நாவல், இருவகைகளில் நம்மை ஈர்க்கிறது. ஒன்று கதையோட்ட்த்துடன் இழைத்துக் காட்டப்படும் வரலாற்று நிகழ்வுகள். இரண்டு, தமிழகத்தின் தென்காசியிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லீம்களின் மூன்று தலைமுறை வாழ்வியலின் யதார்த்தங்கள். உரையாடல்களில் எளிமையும், இந்தியக் கிராமிய யதார்த்தமும் செறிந்து காணப்படுகின்றன. உள்ளடக்கமாக நகைச்சுவையும் இழையோடக் காண்கிறோம். இதில் மிகப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்று எதுவுமே இல்லை. இருந்தும் இந்த நாவல் ஒரு சிற்றோடையின் அமைதியான சலசலப்புடன் வளைந்து வளைந்து நகர்ந்து, நம்மையும் அதனுடன் இழுத்துச் செல்கிறது. . ISBN எண்: 978-981-07-3240-0