இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையின் முக்கிய கதாபாத்திரமும், ஒரு ‘நான்’. இது ‘நான்’களின் கதை. அந்த ‘நான்’ நீங்களாகவும் இருக்கலாம், உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். இந்த ‘நான்’கள், வாழ்க்கையில் வெவ்வேறுவகையான சூழல்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவர்களை எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாக்குகின்றன என்பதே கதைகளின் கருக்கள். கதைகளின் முடிவில், ‘நீங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள் என்று நினைத்தால்தான், நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்’ என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பல 'நான்'களின் இந்தக் கதைகள், வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்கவும், அதை மறுமதிப்பீடு செய்யவும் உதவக்கூடும். ISBN எண்:978-981-07-6293-3