சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்தின் சிறுகதைப் போட்டிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே 'சிலிக்கான் இதயம்'. மாதந்தோறும் நடக்கும் போட்டிகளின் வழியாக அடையாளம் காணப்பட்ட 11 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியக் கூறாகிவிட்ட சிறுகதையை எழுதக்கூடிய புதுப்புது சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் தொடர்ந்து அடையாளம் காணும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டிகள், நம்பிக்கைமிக்க விதைகளை தந்திருப்பதை இந்தக் கதைகளின் ஊடாக வாசகர்கள் உணர்வார்கள். சிங்கப்பூர் வாழ்க்கையையும், அதற்கு அப்பால் உள்ள உலகத்தின் கூறுகளையும், அதற்கும் அப்பால் உள்ளதோர் எல்லையற்ற வெளியின் உண்மைகளையும் பேசும் கதைகளைத் தாங்கி நிற்கிறது இந்தத் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய உலகின் கவனத்திற்கு உள்ளாவார்கள் என்பதைச் சொல்லும் ஒரு முக்கியத் தொடக்கமாகவும் அமைகிறது. ISBN எண்: 978-981-07-6242-1