விரைவாக சிந்திக்க வேண்டும். சாமர்த்தியமாகக் கணக்குப்போட வேண்டும். உடனே, உடனே முடிஎடுக்கவேண்டும். மிகச் சரியான முடிவுகளை மிகச்சரியான நேரத்தில் எடுப்பது ஒரு கலை.
* தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஆனால், அவற்றையும் நமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
* ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு நாம் என்னென்ன முன்தயாரிப்புகள் செய்யவேண்டும்.
* ஒவ்வொரு முடிவின் விளைவையும் முன்கூட்டியே யூகிப்பது சாத்தியமா.
* சரியாக மட்டுமல்ல, நேர்மையாகவும் ஒரு முடிவு அமைவதற்கும் நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது.
முடிவெடுப்பதற்கு சுலபமாக குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. அடிப்படைகளை சீராகப் பயின்றாகவேண்டும். முடிவெடிக்கும் கலை
தொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் நிபுணர்கள் பலரோடு நெருங்கிப்பணியாற்றியிருக்கும் நூலாசிரியர் ராபர்ட் இ. குந்தரின் இந்தப்புத்தகம் உங்கள் சிந்தனை முறையை பெரிய அளவில் மாற்றியமைக்கும்.
- ராபர்ட் இ. குந்தர்.