ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படைத் தேவை என்ன? சிந்தனைத் திறன்,யோசிக்கும் ஆற்றல், ஆனால் ,நமது கல்வி முறையில் இவற்றுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. படிப்பும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதும் என்ற தவறான எண்ணம் நம்மிடையே உள்ளது. புத்திசாலித்தனம் என்பது,வாகனத்தின் என்ஜினைப் போன்றது. யோசிக்கும் திறன் என்பது, வாகனத்தை ஓட்டும் திறமையைப் போன்றது. புத்திசாலிகள் அனைவரும் வெற்றி காண்பதில்லை. வெற்றிபெற்ற அனைவரும் புத்திசாலிகள் இல்லை. யோசனைகள்தான்,வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கின்றன. வெற்றி என்பது ,நல்ல முடிவுகள் எடுப்பதைப்பொறுத்தது.நல்ல முடிவு என்பது யோசிக்கும் திறனைப் பொருத்தது.