வெற்றிகரமான, மேன்மையான , மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறப்புச் சூத்திரங்கள் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக்
குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை.இவற்றை எல்லாம் அவர்கள் எப்படிக் கற்றுக் கொண்டார்கள், பிறக்கும் போதே அவர்களுக்கு எல்லாம் தெரியுமா, முயற்சி செய்தால் நாமும் அதைக் கற்றுக்கொள்ள முடியுமா. இந்தக் கேள்விகளுக்கான அழுத்தம் திருத்தமான பதில் , முடியும் என்பது தான். வாழ்க்கையின் விதிகளை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். நமக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த கொள்கைகள்தான் வாழ்க்கையின் விதிகள். வாழ்க்கை என்னும் அட்சய பாத்திரித்திலிருந்து இன்னும் அதிகமான விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள, வெறுப்புகளை சுலபமாக விட்டொழிக்க, சந்தோஷமான , அமைதி மிகுந்த, மனநிறைவான வாழ்க்கையைப்பெற இந்த விதிகள் நிச்சயம் உதவும். இந்த விதிகள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமும் நிறைய நன்மையை உருவாக்குவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
- ரிச்சர்ட் டெம்ப்ளர்.