உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
செயல்திறன் கொண்ட ஒரு டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.
* ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன.
* உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை இரண்டுக்கும் ஒத்துவரும் நபர்களைக் கண்டறிந்து தேர்வு செய்வது எப்படி.
*போதிய அளவு திறமை இருந்தும் பலரால் உங்கள் எதிர்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போவது ஏன். அவர்களை எப்படிச் சீராக்குவது.
* எல்லோருக்கும் பிடித்த தலைவராக இருப்பது சாத்தியமா.
* பணியாளர்களை எப்படி மதிப்பீடு செய்வது.
இந்த விதிகளைத் தெரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இன்னும் எளிதாகிவிடும். நீங்கள் அடையும் வெற்றி இன்னும்
பிரமாண்டமானதாக மாறிவிடும். இதன் பிறகு பதவி உயர்வு என்கிற ஏணியில் நீங்கள் உயர உயரேறிக்கொண்டிருப்பதை சர்வ
சாதாரணமாக எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மற்றவர்களை விடுங்கள், நீங்களே நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
- ரிச்சர்ட் டெம்ப்ளர்.