இன்றைய விஞ்ஞான யுகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளின் பயன் வாழ்க்கையில் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. அலுவலகமானாலும் சரி வீட்டினாலும் சரி மின் சாதனங்கள் இன்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலையாகிவிட்டமையினால் அதன் செயல்பாடுகள் பற்றியும் பழுதாகும் நிலைப் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியதாகிறது.