தமிழில் இருபதாம் நூற்றாண்டில்தான் 'கலை இலக்கியம்' பெரும் மாற்றத்திற்குள்ளாக்கப்படுகிறது. இலக்கியத்தில், நாவல், கதை, கவிதையிலும் 'நவீனம்' என்கிற சொல்லாடல் வலுக்கத் தொடங்குகிறது. அதாவது கவிதையை மையமாகக் கொண்டு பார்ப்போமேயானால் பாரதி, ந. பிச்சமூர்த்தி..., பிரமிள்... போன்றோரின் வருகைக்குப் பின் 'எழுத்து' இதழில்தான் கவிதை மற்றுமோர் புதிய மாற்றத்திற்குத் தம்மை உரு (வடிவம்) மாற்றிக்கொள்கிறது. ஆனால் 'எழுத்து'கவிதைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போன்று நாடகம், சினிமா,இசை, ஓவியம் போன்றவற்றிற்கு அதற்கான பங்கினைக் கொடுக்கவில்லை என்கிற விமர்சனம் எழுத்தாளர்களாலும் ஓவியர்களாலும் முன் வைக்கப்படுகிறது.