மாடி ஓலைக்காற்றுகளின் அடர்த்தி குறைந்து விட்டது. பிய்ந்து விட்டது போல வலது பக்க மேல் மூலை வெளிச்சத்தை அபரிமிதமாய் துப்பிக் கொண்டிருந்தது. ஓலைக்கிற்றுகளின் அடைபடாத வாசல்பகுதி படுத்துக்கிடக்கும் எனது பார்வையில் படுகிறது. மாலை நேரத்தில் நிலவு பூர்ணமாய் தென்படுவது அதிசயமாய் இருக்கிறது. நீலவானின் விரிவை படுத்த படியே பார்க்க முடியவில்லை. முழுநிலவின் இடது புறத்தில் நூலிழை எதுவும் இன்றி பட்டம் பறந்து கொண்டிருந்தது. அதன் வால் படபடப்பு உடம்பிற்குள் நுழைந்து விட்டது போல சட்டெனப் பதட்டம் என்னுள் நிறைந்து விட்டது.