சிருஷ்டியின் மூலத்தில் இருந்திருக்கிறேன்.நித்தியத்தின் அந்தத்தில் இருக்கப் போகிறேன்.என் ஜீவிதம் என்றைக்கும் வாடிப் போகாது. எல்லையற்றதன் பிரபஞ்சத்தில் மிதந்திருக்கிறேன்கற்பனை உலகின் உயர் வெளியில் பறந்திருக்கிறேன்.அங்கே தெய்வீக ஒளிவட்டத்துக்கு அருகே இருந்திருக்கிறேன்இங்கோ ஜடத்தின் சிறையில் இருக்கிறேன்.