
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Paramartha Guru Kathaigal
Free shipping over ₹500
பரமார்த்த
குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம்
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக
இருந்தனர்.பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது…
கிருஷ்ணா! புடவை கொடு!
பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத்
திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து
ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக்
கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.
அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.
“அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி.
“ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான் மடையன்.
பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!
“சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர்.