துடிக்கும் இதயத்திலிருந்து சொற்களற்ற ஒரு பாடல் குருதி கசியும் தமனியிலிருந்து பொங்கிப்பாயும் ஒரு காட்டாறு பயனற்ற அன்பினால் பின்னப்பட்ட வழக்கொழிந்த பாணியிலான ஒரு ஸ்வெட்டர் மூளையை எரிக்கும் வேனலிலிருந்து கைப்பிடி அளவு கபாலச் சாம்பல் கவிதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒன்றிரண்டு அகதிச்சொற்கள் ஒருதுளி கண்ணீர் கொஞ்சம் கடைசிமூச்சின் கனல் வேறொன்றுமில்லை கொடுக்க என்னிடம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)