திரையுலகை மையமாக வைத்து எத்தனையோ நாவல்கள் வெளிவந்து விட்டபோதிலும் இன்றுவரை தமிழில் எழுதப்பட்ட மகத்தான கலைப்படைப்புகளாகத் திகழ்பவை அசோகத்திரனின் கரைந்த நிழல்களும் மானசரோவரும்தான். சினிமா என்னும் வண்ணக்கனவின் பின்புலத்தில் கவிந்திருக்கும் ஆழமான இருளுக்குள் ஒரு மெழுகுவர்த்தி துணைகூட இல்லாமல் பயணம் மேற்கொள்கிறார் அசோகமித்திரன். அரிதாரம் அவருக்கு ஒரு பொருட்டில்லை. அந்தராத்மாக்களை அடையாளம் காண்பதே அவரது நோக்கம்.