சிறார் குறித்தான கதைகளைச் சொல்லி அனைவரையும் மயக்குகிற இந்த எழுத்துப் பேரழகனின் பெயர் நிக்கலாய் நோசவ். ரஷ்ய
சிறார் இலக்கியத்தின் என்று மழியாத பிரகாச நட்சித்திரம். இந்த நூல் சிறார்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், அவர்களின் ஆழத்தில்
தோழமையின், மனித அன்புறவின் , அறிவின் பொறிகளை உண்டாக்கி தழலாக வளர்க்கும். சிறார், இலக்கியத்தின் அபூர்விப்
பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்று என உறுதியாகசெ சொல்ல முடியும். ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளி கல்லூரி நூலங்க்களிலும் , பொது நூலங்களிலும் இந்த நூல் தவறாமல் இடம்பெறவேண்டிய அவசியம் உண்டு.
சிறார்கள் என்று சொல்லப்படும் பூவுலகின் மலர்த் தோட்டங்களின் அழகை, மூலிகை வாசனையை, மாபெரும் நம்பிக்கைகளை,
எல்லையற்ற கவிப்பரப்பை நாம் எப்படித்தான் வரையறுத்துவிட முடியும்? அதில் இந்த எழுத்தாளர் வெற்றி பெற்றிருப்பது நம்
பெருமையாகவும் அமைகிறது . இந்த எழுத்தாளர் சிறார்களிடம் கொண்ட தூய அக்கறை, எளிமையும் அருமையுமான இக்கதைகள் மூலம் -ஒரு தாய் மான் புதிதாய் ஈன்ற குட்டியை மென்மையாகத் தலையால் உந்தி உதய திசை நோக்கி நடக்க ஊக்குவதுபோல வழிப்படுத்தும் கருணை நம்மை நெகிழச் செய்யும், இப்புத்தகத்தை வாசிக்கின்ற முந்நாள் சிறார்களின் மனதில் கடந்துபோன குழந்தைப் பருவம் மகிழ்ச்சியும் துயரமுமிக்க மேகம் போல தங்கிச் செல்லும்.
-பதிப்பகத்தார்.