இயற்கை நம்மைச் சுற்றி படைத்துள்ள மரம், செடி, கொடி, கீரைகள், மூலிகைகள் அனைத்துமே மனிதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை தந்த வரங்களே ஆகும். நவீன மருந்துகளால் குணமாக்க முடியாத நோய்களைக் கூட சாதாரண ஒரு மூலிகை முழு குணம் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்தது என்பதை யதார்த்தத்தில் பலர் உணர்ந்து வருகின்றனர். சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா அந்த வகையில் கைதேர்ந்தவர். அவர் வைத்தியத்தின் மூலம் குணம் பெற்ற பலருக்கு நாமே சாட்சி சித்த மருத்துவத்தில் அவரது தேடல் சித்தர்களின் தேடுதலுக்கு ஒப்பானது.