ஒவ்வொரு பொருளிலும் இரு வேறு குணங்கள் உண்டு அதாவது ஒரு மருந்தில் நல்வினையும், தீவினையும் இரண்டும் சேர்ந்தே அமையும். ஒரு பொருளின் நல்வினையை மட்டுமே மருந்தாக்குதலே மருத்துவமாகும். உணவில் புளி அதிகமானால் பித்தம் அதிகரிக்கும், அதே புளி அளவானால் நன்கு செரிப்பு உண்டாகும். காரம் உணவில் அதிகரித்தால் புண் உண்டாகும். அதே காரம் மிதமானால் உடல் நீர்க்கோர்வை தணியும். வளர்ந்து வரும் சித்த உணவியல் துறையில் புளி, மிளகாய், நெல்லி பற்றிய இந்த நூலுக்கும் ஒரு தனியிடம் உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.