திருவள்ளுவரின் பார்வையில் காதல் என்னும் இந்நூலில் பேராசிரியர் ப. முருகன் பல்வேறு கருத்துக்களை எடுத்து சொல்லியுள்ளார்.
திருவள்ளுவருடைய காலம், சமயம், சிறப்பு, வளர்ப்பு, பற்றிய கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் பேராசிரியர் ப. முருகன் சிறப்பாக சுட்டிக்காட்டுவது வடமொழிக் காமத்துக்கும் தமிழ்மொழிக் காமத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு - வடமொழிக்காம்ம் முழுக்க முழுக்க உடல் இன்பத்தைத் தழுவியதாக உள்ளபோது தமிழ்க்காம்ம் தலைவர் தலைவிபால் நிகழும் பல்வேறு மெய்பாடுகள், வகைகள் அவை திருமணத்திலும் ஊடுருவி அமைகிறது என்னும் தகைமையும் எடுத்துக்காட்டுகிறார்.
காமத்துப் பாலில் வரும் அதிகாரங்கள் கூறும் பொருள் எளிய அதேபோது இலக்கிய நடையில் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். இது வாசகர்களுக்குப் பயன் விளைவிப்பதாக இருக்கும்.