இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளிதாக அமையப் பெற்றுள்ளது. மற்றும் திருக்குறளுக்கும் கூடியவரையில் சொல்லுக்குச் சொல்பொருள். அமையுமாறும் மொத்தமாகக் கருத்து விளங்குமாறும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சிறு நூலில் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை, எல்லாவற்றையும் எளிய தமிழில் காணக்கூடும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)