பேராசிரியர் முனைவர் கமலம் சங்கர் அவர்கள் இதழியல், மக்கள் தகவல் தொடல்பியல், சுற்றுலாவியல் துறைகளி பட்டயச் சான்றிதழ் பெற்றவர். பள்ளி ஆசிரியராக 19 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக 13 ஆண்டுகள் அனுபவம் பெற்று மதுரைக்கல்லூரியில் தேர்வுநிலை விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய 'நடிகரும் மனிதர்தான்' என்ற நாடக நூல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது பெற்றது. நிறைய வானொலி நாடகங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறுகதை, நாடக நூல்களும் எழுதியுள்ளார். அவர் அனுபவம் பெற்ற துறைகள் பல.
அனைத்தையும் இணைத்து சுற்றாலவும், உளவியலும், சுற்றுலாவும் சமூகவியலும், சுற்றுலாவும் பொருளியலும், சுற்றுலாவும் விடுதி நிர்வாகவியலும், சுற்றுலாவும் தகவல் தொடர்பியலும், சுற்றுலாவும் இலக்கியமும் ஆகிய தலைப்புகளில் பல துறைகளையும் இணைத்து ஆகிய நூலைத் தொகுத்துள்ளார்.