இந்த பெண்மனம் நாவலில் சந்திராவின் உள்ளத்தை அவள் தந்தை கல்யாணராமய்யரும் சித்தி பார்வதியும் அறிய முடியாது தவிக்கிறார்கள். ஜெகந்நாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முடியாது. முதலில் தவித்து முடிவில் இணைபிரியா வகையில் பின்னிப் பிணைகின்றன. மீண்டும் பெண்மனம் நாவலில் தாய் சந்திரா, தந்தை ஜெகந்நாதன், காதலன் சுகுமார் இவர்கள் மூவரும் வீணாவின் மனத்தை அறிந்து கொள்ள முடியாது தவிக்கிறார்கள். இரு தலைமுறைகளுக்கிடையேயுள்ள இடைவெளிகள் கலாச்சார வேறுபாடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர் அவர்கள்.