உலகப் பொதுமறையாகிய திருக்குறளுக்கு அடுத்த படியாக நாலடியார் வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு விளக்கக் கூடியதாக விளங்குகிறது. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இக் கலியுக வாழ்க்கை என்பது முக்கால் பங்கு அதர்மமும், கால் பங்கு தருமமும் கொண்டதாக இருக்கிறது. இதனால் அதர்ம்மே சிறந்த்து, தரும வழியில் சென்றால் வெற்றியடைய முடியாது என்று பலர் தைரியமாக பிரச்சாரம் செய்கின்றனர்.