மவனங்கள் அனைத்திற்கும் தாயாக விளங்குபவள் அன்னை ஆதிபராசக்தி. அன்னையின் அற்புதங்களை, லீலைகளை அறிந்து கொள்ள உதவுவது ஸ்ரீ தேவி பாகவதம். அளவற்ற பெருமைகளைக் கொண்ட அன்னை பராசக்தியின் பேராற்றலை விளக்குவது அரிது. தேவிபாகவதத்தின் கதைகளில் மிக முக்கியமானது மகிஷாசுர வதம். அகங்காரத்தின் மொத்த உருவமாக விளங்கும் மகிஷாசுரனை வதைத்து தேவர்களைக் காத்தாள் தேவி பராசக்தி. இதனை விளக்கும் விதமாக மகிஷாசுரன் கதை கொடுக்கப்பட்டுள்ளது.