நாம் வாழ்க்கையை எந்தக் கோணத்தில் பார்க்கின்றோமோ, அதே கோணத்தில்தான் வாழ்க்கை நம்மைத் திரும்பிப் பார்க்கின்றது. வாழ்க்கையை அறமாகப் பார்த்தால், அது திருக்குறள் ஆகின்றது. வாழ்க்கையைத் திருப்பணியாகப் பார்த்தால், அது திருவாசகம் ஆகின்றது.வாழ்க்கையைப் போர்க் களமாகப் பார்த்தால், அது கலிங்கத்துப் பரணி ஆகின்றது.