சுமார் 12 வயது முதற்கொண்டு 16 வயது வரை யுள்ள பதின்ம வயது
இளைஞர்களுக்குத் துணிச்சல் மிகுந்த கதை களில் (Adventure Stories) மிகுந்த
ஆர்வம் உண்டு . அவற்றை அவர்கள் ஆர்வமாகப்படிப்பார்கள். கதாபாத்திரங்களும்
இந்த வயதுள்ள சிறார்களையே மையப்படுத்தியுள்ளது சுமார் 12 வயதுள்ள தங்கமணி
என்ற சிறுவன் கூரிய அறிவு உடையவன். பத்து வயதுள்ள சுந்தரமே ஒரு தமாஷ்
பேர்வழி. 9 வயதுடைய கண்ணகி பயந்த சுபாவம் உடை யவள். இந்த மூவரையும்
வைத்துக் கொண்டுதான் இந்தக் கதை எழுதப் பட்டுள்ளது. ஜின்கா என்ற குரங்கு
தங்கமணியினால் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதால் அது இடை இடையே
புகுந்து ஆச்சரியமான பல சாகசங் களைப் புரிகின்றது. பல தடவைகளில் உயிரைக்
காப் பாற்றவும் முன்வந்துள்ளது. இந்த ஜின்கா குரங்கினால் சிறுவர்கள் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மொத்தமாக நான்கு பேர்களும் சேர்ந்து உள்ளத்தைக்
கவரும் வகையில் நடந்துகொள் வதை நீங்கள் காணலாம். பொதுவாகச் சிறுவர் .
சிறுமிகளுக்கு ஒரு சிறந்த விருந்து நடப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். இன்னும்
அதிகம் எழுதப்போனால் உங்களுக்குப் பிடிக்காது. ஆகையால், கதைக்குள் நேராக
நுழையுங்கள். பிறகு உங்களுக்குப் பிடிக்கிறதா என்று தெரிவியுங்கள்.