சுமக்க முடியாத சுமை சிலுவை. அதைச் சுமக்கவைப்பது அக்காலத்தில் ஒரு தண்டனை. இயேசுவையும் சிலுவை சுமக்க வைத்தார்கள். தூக்க முடியாமல் தூக்கி, நடக்க முடியாமல் நடந்தார். இதற்கிடையில் சவுக்கடி அவர் உடலைச் சிதைத்தது. சிலுவையில் அறையப்பட்டார். அத்தகு சிலுவைகளையும் சிறகுகளாகக் கருதி எழுந்து பறக்கும் ஆற்றல்பெற நம்மைக் கவிஞர் ஆருர் தமிழ்நாடன் அழைக்கிறார். சிறகுகளாகும் சிலுவைகள் என்ற இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உயிர்த்துடிப்புள்ள கவிதைகளைப் படிக்கும்போது உள்ளத்தில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் எற்படுவது உறுதி.