மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து மதக்கலவரங்களைத் தூண்டி வரும் ஆர்.எஸ். எஸ். ஐயும் அதன் பரிவாரங்களையும் அம்பலப்படுத்த வேண்டியது தேசபக்தக் கடமையாகும். மீண்டும் அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்து விடாமல் தடுப்பதும் நாட்டு மக்களின் கடமையாகும்.
தோழர். எஸ்.ஏ. பெருமாள் எழுதிய இந்நூல் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, அதன் அரசியல் பரிணாமம் குறித்துப் பேசுகிறது. காந்தி படுகொலை முதல் குஜராத் படுகொலைகள் வலரை எடுத்துக் கூறி உஷார்படுத்துகிறது.