இந்நூலின் தலைப்பு வாழ்வின் வளம் நல்கும் ஞானப் பேழை. தலைப்புக்குக் கீழே- நூலாசிரியர் பெயருக்கு மேலே- ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலைத் தழுவித் தமிழில் தருபவர் இராமலிங்கம் ஶ்ரீனிவாசன் என்று அச்சாகியிருக்கிறது. இந்த நேர்மையே என்னை அவசரமாக இந்நூலுக்குள் இழுத்துப் போய்விட்டது! வாழ்வியலுக்குள் இடையறாது இயங்கியபடியே, இலக்கிய நிழலுக்குள் இளைப்பாறி இளைப்பாறி மகிழ்வெய்தும் ஒரு கோடைக்கால நெடுஞ்சாலையின் நடைபயணி நான்! நேரம் என்னைத் துரத்துவதும் நான் நேரத்தைத் துரத்துவதும் - எங்கள் அன்றாட கண்ணாமூச்சி விளையாட்டு!