'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் கையைப் பிடித்திழுக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கதைகள் மலையெனக் குவிந்து கிடந்தாலும் அவைகளில் பல நெஞ்சில் ஏறி, நிமிடநேரமே தங்கியிருந்து, பின் நெஞ்சைவிட்டு விலகி நெடுந்தூரம் சென்று விடுவதை வாசகர்கள் பலரும் அறிவர். ஆனால் பழங்கதைகள் என்றும், முன்னோரால் சொல்லப்பட்ட கதைகள் என்றும் சொல்லப்படும் கதைகள் பல கோபுரத்துக் கலசங்களாக விளங்குவதையும் வாசகர்கள் அறிவர்.