உள்ளத்தில் எழும் மெல்லிய உணர்வுகளும் அறிவின் தீர்க்கமான தாகங்களும் உரசுகையில் தோன்றும் பொறிகள் அன்பின் முன் அடங்கி ஒன்றுடன் ஒன்று இழைந்து இணைந்து ஒன்றுக்கொன்று உறுதுணையாகிவிடுவது அன்பின் அற்புதம். வாழ்வின் எல்லா பூட்டுக்களுக்கும் பொருந்தும் ஒரே சாவியாக அது... காதலை நேசிப்பவர்களுக்கும் வாழ்வை யோசிப்பவர்களுக்கும் இந்த நாவல் காதல் வாழ்க்கை பற்றிய யதார்த்தமான சிந்தனையை உருவாக்குவதில் சிறிதேனும் உதவுமானால் அதுவே நாவலின் வெற்றி, எனது மகிழ்ச்சி. சீரிய முறையில் புத்தக வடிவம் கொடுத்த வானதி பதிப்பகத்தாருக்கு நன்றி.