திருவள்ளுவர் திருக்குறளின் அறம் பொருள் என்கிற அதிகாரங்களையும் எழுதியபோது, அதில் உள்ள பல குறட்பாக்கள், நிர்வாக இயல் என்று சொல்லப்படும் மேனேஜ்மெண்ட் தத்துவங்களை பிரதிபலிக்கிறது என்று நினைத்தாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இன்று பிரபலமாகி வரும் நிர்வாக இயல் மற்றும் வணிக முறைகள் பற்றிய பல கருத்துக்களும், தத்துவங்களும் திருக்குறளின் பல பாடல்களில் பிரதிபலிக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, திருக்குறளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகிறது.