இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப.
லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து
சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும்
வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன்,
ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த
சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
1994-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சோ. தர்மன் எழுதிய ‘(அ)ஹிம்சை’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிவசங்கரி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை நா. கதிர்வேலன் தேர்வு செய்தார்.