பாரதியின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த சுதந்திர உணர்வுகளே பாடல்களாக வடிவெடுத்தன. வந்தேமாதரம் என்ற மந்திரத்தை உச்சரித்தார். விடுதலை விடுதலை விடுதலை என்று வீர முழக்கம் செய்தார்.
தேசியத்தலைவர்களைப் போற்றினார். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் புகழ்ந்தார். நாட்டைத் தொடர்பு படுத்தி பாரதி பாடிய பாரத தேசம், விடுதலை இயக்கம், தேசியத் தலைவர்கள், தமிழ்மொழியும் தமிழரும் என்ற நான்கு தலைப்புகளையும் இணைத்து ஒரே நூலாக வெளியிட்டிருக்கிறது.