எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் இந்நூலில் வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் வளர்ச்சியைப் பற்றி ஆக்கபூர்வமான மேற்கத்தைய விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களை டாக்டர் முருகானந்தன் வெளியிட்டுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றி மட்டிமல்லாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் மிக இலகுவில் விளங்கத்தக்கதாக எழுதியுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாடு என்பது போஷணைக் குறைபாட்டினால் மாத்திரமன்றி அதீத போஷணையால் ஏற்படும் நோய்களையும் குறிப்பது ஆகும். டாக்டர் முருகானந்தனின் இம்முயற்சி, வாசகர்களான உங்களின் அறிவை வளர்ப்பதோடு உங்கள் செயல்முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மனப்பாங்களை நிச்சயம் தரும்.