பாரதியின் ஆத்திச்சூடியின் பொருளுக்கேற்ப நம் மண்ணில் உலவும் கதைகளைத் தேடியெடுத்துத் தொகுத்திருக்கிறார் சிவபாரதி. குழந்தைகளுக்கானதாக மட்டுமின்றி, பெரியவர்களுக்கான நீதியும் இந்தக் கதைகளின் ஊடாக ஒளிந்திருக்கிறது. சிவபாரதி, பழைய வாய்வழி இலக்கியங்களைத் தேடியெடுத்துத் தொகுப்பதில் பேரார்வம் மிக்கவர். அவரின் இந்த 'பாரதி ஆத்திச்சூடி' கதைகள் தமிழுக்கும் குழந்தைகளுக்கும் மிகச்சிறந்த பங்களிப்பு.