ஒரு காட்டில் ஒரு கொழுத்த கரடி ஒன்று வாழ்ந்து வந்தது. இந்தக் காட்டில் என்னைவிடப் பலவான் யாரும் இல்லை' என்ற
திமிரில் அது நடந்து கொண்டது. ஒரு மரத்தின் பொந்தில் நிறைய தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததை அந்தக் கரடி பார்த்தது. தேனீக்கள் காட்டுப் பூக்களிலும், பழங்களில் இருந்தும் தேனைச் சேகரித்தன. சேகரித்த தேனை கூட்டில் சேமித்து வந்தன. இனி உணவு கிடைக்காத காலத்தில் தேனை உண்டு பசியாறலாம் என்று தேனீக்கள் கருதின. நல்ல தேனீன் மணம் கரடியின் மூக்கைத் துளைத்தது. கொழுத்த கரடி மரத்தை நெருங்கி வந்தது. உள்ளே தேனீக்கள் இருந்தன. ஹேய் தேனீக்களே, எல்லோரும் வெளியோருங்கள் என்று அதட்டியது கரடி. தேனீக்கள் ஒன்றாய் பறந்து வந்தன. குழந்தைகளின் இந்தக் கதைகளை மலையாளத்திலிருது தமிழாக்கம் செய்து தொகுத்து அளித்துள்ளார். திரு. கு. பாரதிமோகன். இவை சில இதழ்களில் வெளிவந்தவை. இவற்றை குழந்தைகள் படித்துப் பயன் பெறுவர் என நம்புகிறோம்.
- பதிப்பகத்தார்.