சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃபிகள் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்த சமயங்களிலும் இல்லை.ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகிவிடுகின்றனர். மற்றவை மூடப்பட்ட விதைகளாக முளைக்காமலேயே இருந்து விடுகின்றன. தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒருவகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழி எனலாம். உங்கள் எல்லா நாளும் இனிய நாளாக ஆகுவதற்கு கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.