கதாசிரியர் சென்னையை சேர்ந்தவர். இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில், எழுத்தாளர் உயர்திரு சுஜாதா அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சித் தொடர் இயக்கியிருக்கிறார். இவரது முதல் சிறுகதை ஏப்ரல், 2016-ல் 'ஜன்னல்' இதழில் வெளிவந்தது. ஜன்னல் இதழின் தொடர் ஆதரவினால் தூண்டப்பட்டு தொடர்ந்து எழுதிய கதைகள் குமுதம், குங்குமம் போன்ற இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
2018 ஆம் ஆண்டுக்கான சென்னையர் கதைகள் தெகுப்பில் இவரது இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
குமுதம்-கொன்றை அறக்கட்டளை நடத்திய சங்க இலக்கிய சிறுகதைப் போட்டியிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.