தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்
இவ்வாறு பாவேந்தரால் புகழப்பட்ட ஜீவா என்ற மாமனிதன் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
56 ஆண்டுகளே ( 1907 - 1963 ) அவர் வாழ்ந்தாலும் நாட்டுக்கும், சோஷலிச கோட்பாடுகளுக்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய சேவை பிரமிக்கத் தக்கது.
1932- ல் காந்திஜி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் துவங்கி நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு பெற்று பலமுறை சிறை சென்றார். நாடு சுதந்திரம் பெற்றப் பின்பும் புதிய ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்பட்டார்.