இவரைப் போன்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி தலைக் கழகங்களில் நிரம்பி
விட்டால், நம் நாட்டு வரலாறு திருத்தி எழுதப் பெறும்; திருப்பி எழுதப்
பெறும். அந்தத் திருநாள் வருவதாக! நமக்கின்பம் தருவதாக! இவர் விரல் பட்டு
வெளிச்சமாக்கிய நூல்கள் நூற்றைத் தாண்டும். நம் வாழ்வைத் தூண்டும்;
மனச்சான்றைத் தீண்டும். இவர் எழுத்துக்களில் சொக்கிப்போன சொக்கன் நான்.
அத்தகு சொக்குப்பொடி, இவர் படைப்புகளில் பதிந்திருக்கும்;
பொதிந்திருக்கும். அந்த வரிசையில் வந்த பந்தந்தான் "மருந்தாகும் உணவு".