வேளாளர்களே 'வேளிர்' எனப்படுவோர். சங்க காலத்தில் வேளிர்கள் ஒவ்வொரு பகுதியையும் ஆண்டனர். இவர்கள் குறுநில மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கூட்டமாகவும் குலமுறையொடும் வாழ்ந்தவர்கள். கொங்கு நாட்டாரின் பண்பாடு என்பது தனிச்சிறப்புக்குரியது. வேளாளர் திருமணம், சடங்குகள், சீர்கள் சிறப்புக்கள் பற்றியெல்லாம் அறிந்து கொள்வதற்கும், பண்பாடு நாகரிகம் வரலாறுகள் போன்றவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.