நம் தமிழகம் சேரமண்டலம், சோழ மண்டலம் பாண்டிய மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று. இவற்றுள் சோழ மண்டலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம் எனவும் வழங்கப் பெறும்.