மனிதன் தனது சிந்தனைத்திறனின் ஒட்டுமொத்த அறிவையும், ஆற்றலையும் புதிய புதிய கருவிகள், பயன் பாட்டு எந்திரங்களையும் கண்டுபிடிக்கப் பயன்படுத்துகின்றான். மனித வாழ்க்கையின் அவசியத் தேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள இவை பயனாகின்றன. மானிட வளர்ச்சியின் ஒட்டுமொத்த உயர்வும், இவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் மற்றும் உடல் உழைப்பு ஆகிய வற்றின் அடிப்படையில் அமைகிறது.